செய்திகள்

கணவரை அறிமுகப்படுத்திய பிகில் நடிகை (படங்கள்)

29th Sep 2022 02:56 PM

ADVERTISEMENT

 


2019-ல் விஜய் நடித்த பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி ரெட்டி. அர்ஜுன் நடத்திய சர்வைவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காயத்ரி பங்கேற்று கவனம் பெற்றார். கவின் நடித்த லிஃப்ட் படத்தில் நடித்தார். சென்னையைச் சேர்ந்த காயத்ரி, சிறுவயது முதல் விளம்பரங்களில் நடித்து வருகிறார். 

கடந்த ஏப்ரல் 29 அன்று தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டகிராமில் காயத்ரி தெரிவித்தார். இந்நிலையில் தனது திருமணம் நடைபெற்றது குறித்தும் தற்போது தெரிவித்துள்ளார். என்னுடைய கணவரை அதிகாபூர்வமாக அறிமுகப்படுத்துகிறேன் என்கிற குறிப்புடன் திருமணப் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT