செய்திகள்

’ஆளவந்தான்’ தோல்விக்கு கமல்தான் காரணம்: பிரபல தயாரிப்பாளர்

28th Sep 2022 03:43 PM

ADVERTISEMENT

 

’ஆளவந்தான்’ திரைப்படத்தின் தோல்விக்கு முழுக்காரணம் நடிகர் கமல்ஹாசன்தான் என பிரபல தயாரிப்பாளர் அதிரடியாக கூறியுள்ளார்.

'மயக்கம் என்ன’ திரைப்படத்துக்குப் பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் உருவான இப்படம் நாளை செப்.29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: கர்ப்பமான நிலையில் திருமணத்தை அறிவித்த பிரபல டிவி நடிகை!

இந்நிலையில், தயாரிப்பாளர் தாணு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் கமலின் இடையூறு அதிகமாக இருந்ததாகவும் அவர் சொல்வதைக் கேட்கும் நிலையில் மற்றவர்களை வைத்திருந்ததாலும் அப்படம் தோல்வி அடைந்தது எனக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது அப்படத்தின் நீளத்தைக் குறைத்துப் பார்த்ததில் கமல் மிகச்சிறந்த கலைஞர் என்றே நினைக்க வைக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாணு தயாரிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ மீண்டும் திரையரங்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT