செய்திகள்

கர்ப்பமான நிலையில் திருமணத்தை அறிவித்த பிரபல டிவி நடிகை!

28th Sep 2022 03:32 PM

ADVERTISEMENT

 

பெங்களூரில் பிறந்து கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த திவ்யா ஸ்ரீதர், கேளடி கண்மணி என்கிற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தமிழில் அறிமுகமானார். மகராசி தொடரில் நடித்தவர் திடீரென அதிலிருந்து விலகினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்கிற தொடரில் நடித்து வருகிறார். முதல் திருமணத்தில் இவருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

இந்நிலையில் பிரபல டிவி நடிகரான ஆர்னவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளார் திவ்யா. சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரில் நடித்துப் புகழ்பெற்றவர் ஆர்னவ். ஆர்னவைத் திருமணம் செய்ததை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார் திவ்யா. மேலும் தான் கர்ப்பமாக உள்ளதையும் அவர் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

 

கேளடி கண்மணி தொடரின் மூலம் எங்களுடைய பயணம் 2017-ல் தொடங்கியது. எங்களுடைய வாழ்க்கையை இணைந்து வாழ முடிவெடுத்தோம். 5 வருடம் இணைந்து வாழ்ந்ததில் நிறைய காதல், அன்பு, சண்டைகள் இருந்தன. நாங்கள் அதிர்ஷ்டக்கார காதலர்கள். இரு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளோம். பலர் எங்களை வாழ்த்தியுள்ளார்கள். சொந்த வீட்டுக்குச் சென்று எங்களுடைய பெரிய இலக்கை அடைந்தோம். எங்களுடைய குழந்தையை விரைவில் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT