செய்திகள்

என்னை மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சி: பாவனா

27th Sep 2022 06:34 PM

ADVERTISEMENT

தன்னை மீண்டும் இருளுக்குள் இழுக்க சிலர் முயற்சி செய்வதாக வேதனை தெரிவித்துள்ளார் மலையாள நடிகை பாவனா. 

தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. தற்போது அவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது அவர் அணிந்திருந்த உடை குறித்து பல்வேறு விமர்சனங்கள், கிண்டல்கள் எழுந்தது. இது குறித்து வேதனையான பதிவினை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

ஒவ்வொரு நாளும் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு வாழ முயல்கிறேன். என் அன்புக்குரியவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்று நினைத்து சோகத்தைத் தவிர்க்க முயல்கிறேன். நான் என்ன செய்தாலும் அவமானப்படுத்துவதும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் என்னைக் காயப்படுத்த நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் மீண்டும் என்னை இருளுக்குள் அனுப்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியை இப்படித்தான் காண்கிறார்கள் என்று நான் புரிந்துக்கொள்கிறேன். அப்படித்தான் உங்களுக்கு சந்தோஷம் கிடைத்தால், அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன். 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT