செய்திகள்

கலிஃபோர்னியா பள்ளியில் ஆர்ஆர்ஆர் படத்தின் ''நாட்டு நாட்டு..'' பாடல்: வைரல் விடியோ

27th Sep 2022 07:43 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய சினிமா பாடலைப் பாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ''நாட்டு நாட்டு..'' எனத் தொடங்கும் பாடலை மாணவர்கள் பாடியுள்ளனர். 

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இந்திய சுதந்திர காலகட்டத்தை பின்னணியாக கொண்டு பிரமாண்ட படைப்பாக உருவாகிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. 

ADVERTISEMENT

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ''நாட்டு நாட்டு..'' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தப் பாடலை எம்.எம்.கீரவாணி இசையமைக்க, தமிழில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை எழுத ராகுல், யாஸின் ஆகியோர் பாடினர். 

இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் குழுவாக நாட்டு நாட்டு பாடலைப் பாடியுள்ளனர். இந்த விடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT