செய்திகள்

பிக்பாஸ் -6: அக். 9 முதல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

27th Sep 2022 06:39 PM

ADVERTISEMENT

 

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 சீசன்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 6வது சீசன் தொடங்கியுள்ளது.

படிக்கபிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார்?

ADVERTISEMENT

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 6-ன் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், இந்த சீசனில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறும். 

 

எனினும், பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்து உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினி டிடி, குக் வித் கோமாளி ரோஷினி, நடிகர் அஜ்மல் அமீர், நடிகை கிரண், ஷில்பா மஞ்சுநாத், மோனிகா, நடிகர் கார்த்திக் குமார், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, 'பாவம் கணேசன்' தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் நேஹா கவுடா,ஜி.பி.முத்து,  உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT