செய்திகள்

சட்டப்படி நடவடிக்கை: சூர்யா படத் தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

26th Sep 2022 12:35 PM

ADVERTISEMENT

 

சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களை இணையத்தில் வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளன. 

அண்ணாத்த படத்துக்கு அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார்  சிவா. சூர்யா 42 என தற்காலிகமாக இப்படம் அழைக்கப்படுகிறது. சூர்யா, திஷா பதானி நடிக்கும் படத்துக்கு இசை - தேவிஸ்ரீ பிரசாத். ஒளிப்பதிவு - வெற்றி. 

சமீபத்தில் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

அனைவருக்கும் தாழ்மையான வேண்டுகோள். சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களைச் சமூகவலைத்தளங்களில் சிலர் பகிர்வதைக் கண்டோம். படக்குழுவினர் ஒவ்வொருவரின் ரத்தத்தாலும் வியர்வையாலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மகத்தான திரையரங்கு அனுபவத்தைப் பரிசாக வழங்க விரும்புகிறோம். எனவே வெளியிடப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களை நீக்கி எங்களுக்கு நல்லது செய்யுங்கள். வருங்காலத்திலும் அதை யாரிடமும் பகிராதீர்கள். தொடர்ந்து பகிர்ந்துகொண்டிருந்தால் காப்புரிமை விதிமீறலுக்காக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT