செய்திகள்

நயன்தாரா காதல் கதை: டீசரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்!

24th Sep 2022 03:32 PM

ADVERTISEMENT

 

பிரபல நடிகை நயன்தாரா காதல் கதையின் ஆவணப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  

நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. இயக்குநர் விக்‌ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர்.

நயன்தாரா - விக்‌ஷேன் சிவன் காதல் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றார்கள். 

ADVERTISEMENT

நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை ஆவணப்படமாக உருவாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கியுள்ள இந்த ஆவணப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.  Nayanthara: Beyond the Fairy Tale என்கிற இந்த ஆவணப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT