செய்திகள்

ஆர்யாவின் கேப்டன்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

24th Sep 2022 04:58 PM

ADVERTISEMENT

 

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படம்  ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சக்தி சௌந்தரராஜன். இவர் இயக்கத்தில் ஆர்யா - சயீஷா இணைந்து நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனையடுத்து மீண்டும் கேப்டன் படத்துக்காக ஆர்யாவுடன் கைகோர்த்துள்ளார் சக்தி சௌந்தரராஜன். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

ADVERTISEMENT

இப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஜீ5 ஓடிடியில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT