செய்திகள்

‘நானே வருவேன்' படத்தின் முதல்பாடல் வெளியீடு

7th Sep 2022 05:59 PM

ADVERTISEMENT

 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வீரா சூரா’ பாடல் வெளியாகியுள்ளது.

'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும்  'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். 

இதையும் பார்க்க : ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்

ADVERTISEMENT

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது, இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க | விடுதலை படத்தின் பட்ஜெட் எவ்வளவு? வெற்றிமாறன் பதில்

இப்படத்தின் டிரைலர் வருகிற செப்.11 ஆம் தேதியும் திரைப்படம் செப்.30 ஆம் தேதியும் வெளியாகும்  எனத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘வீரா சூரா’ பாடல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்பாடலின் வரிகளும் பின்னணி இசையும் கவர்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT