செய்திகள்

ரஜினியின் அடுத்த 2 படங்களை இயக்கவிருக்கும் இளம் இயக்குநர்கள் - உங்கள் கருத்து என்ன?

7th Oct 2022 12:04 PM

ADVERTISEMENT

 

ரஜினிகாந்த்தின் அடுத்த 2 படங்களை இயக்கவிருக்கும் இளம் இயக்குநர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

ரஜினிகாந்த்தின் அடுத்த 3 படங்களை இயக்கும் இயக்குநர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது இந்த இரண்டு படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். 

நடிகர் ரஜினிகாந்த் இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டிவருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது நெல்சன் திலிப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த் அடுத்ததாக 'டான்' பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 'ஹே ராம்' பட நடிகர் மரணம்

'டான்' படத்தின் வெற்றியின் மூலம் மகிழ்ச்சியில் இருக்கும் லைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் ரஜினியிடம் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை அறிமுகப்படுத்தியதாகவும், சிபி சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தை தேசிங் பெரியசாமி அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

 

 

 

Tags : Rajinikanth
ADVERTISEMENT
ADVERTISEMENT