செய்திகள்

தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை வெளியிடும் ஸ்ரேயா...

6th Oct 2022 03:47 PM

ADVERTISEMENT

 

நடிகை ஸ்ரேயா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை பதிவேற்றி வருகிறார்.

நடிகை ஸ்ரேயா தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு 'அழகிய தமிழ்மகன்’, 'சிவாஜி’, ‘கந்தசாமி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: பாவம் அனுஷ்கா!

அதன்பின், ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரேய் கோச்ஷிவை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக ஸ்ரேயா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை பதிவேற்றி வருகிறார். மீண்டும் சினிமாவில் ஒரு ‘ரவுண்ட்’ வர ஆசைப்படுகிறாரா? என சிலர் கமெண்ட் அடித்தாலும்  40 வயதிலும் இளமை குன்றாமல் இருக்கும் ஸ்ரேயாவின் படங்களை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT