செய்திகள்

இனி நடிகையல்ல, நடன ஆசிரியர்! நவ்யா நாயர் அதிரடி அறிவிப்பு

5th Oct 2022 09:24 PM

ADVERTISEMENT

 

சென்னை: பலர் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை நவ்யா நாயர், தசராவை முன்னிட்டு நடன ஆசிரியராக முடிவெடுத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பககத்தில், பரதநாட்டிய கலை நுணுக்கத்தை அறிந்த நாயகியாக அறியப்பட்ட நடிகை தெரிவிக்கையில், கலைத்துறையில் ஈடுபாடு பெற வேண்டுமானால், ஸ்ரீராஜமாதங்கி தேவியை மனமுருகி வழிபடவேண்டும். அத்தகைய நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நான் புதிய வகுப்புகளைத் தொடங்கியுள்ளேன். இவர்களுக்கு விநாயகப் பெருமானும், நடராஜப் பெருமானும் ஒளிமயமான எதிர்காலம் அமைய ஆசிர்வதிக்கட்டும் என்றார்.

இதையும் பார்க்கசொக்க வைக்கும் அழகில் 'அதிதி ஷங்கர்' - புகைப்படங்கள்

இந்த தருணத்தின் முக்கியத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்த எனது குரு, என்னை கற்பிக்கத் தொடங்கச் சொன்னது போல், எனது வாழ்க்கையின் பயணத்தைத் தொடங்கியுள்ளேன் என்றார்.

ADVERTISEMENT

எனது குருவால் கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்து கலைகலையும் என்னால் முடிந்த வரையில் மாணவர்களுக்கும் நான் கற்றுத் தருவேன். எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றி என்றார் நவ்யா நவ்யா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT