செய்திகள்

பாலிவுட் செல்லும் விக்ரம்!

4th Oct 2022 04:58 PM

ADVERTISEMENT

 

நடிகர் விக்ரம் விரைவில் ஹிந்தி படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதால் விக்ரமை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்நிலையில், விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்ததும் விரைவில் ஹிந்தியில் அலாவுகிக் தேசாய்  இயக்கத்தில் தயாராகும் ராமாயணக் கதை ஒன்றில்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இப்படத்தில் சீதாவாக நடிகை கங்கணா ரணாவத் நடிக்க உள்ளதாகவும் தகவல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT