செய்திகள்

முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் யோகிபாபு

3rd Oct 2022 03:11 PM

ADVERTISEMENT

நடிகர் யோகி பாபு முதன் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. 

'வில் அம்பு’ படத்தை இயக்கிய இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை இயக்குகிறார். லெமன்லீஃப் கிரியேஷன் படத்தை தயாரிக்கிறது. படத்தின் இசை அமைப்பாளர் இன்னும் முடிவாகவில்லை.

இதில் யோகி பாபுவிற்கு ஜோடியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். 

முக்கிய கதாபாத்திரங்களில் பெப்சி விஜயன், கே.எஸ் ரவிக்குமார், மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது. 

Tags : Yogi Babu
ADVERTISEMENT
ADVERTISEMENT