செய்திகள்

50 வயதிலும் இளமை: தபு கூறும் ரகசியம் என்ன?

DIN


நடிகை தபு தான் எப்படி 50 வயதிலும் அழகாக இருக்கிறேன் என்ற ரகசியத்தை தெரிவித்துள்ளார். 

தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு தெலுங்கு, ஹிந்தியிலும் அதிக படங்களில் வந்தார். அவருக்கு 50 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் தபுவின் அழகு குறையவில்லை என்று அவரது ரசிகர்கள் வியக்கிறார்கள். 

விசால் பரத்வாஜ் இயக்கத்தில் குபியா படத்தில் நடித்துள்ளார். இது விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகுமென சொல்லப்படுகிறது. எப்படி இப்போதும் அழகாக இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டதற்கு அவர் தி பிலிம் கம்பேனியன் சேனலுக்கு அளித்த பேட்டியில், ''என் முகம் மற்றும் அனைத்திற்கும் நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை, ஆனால் நிச்சயமாக கவனமாக இருக்கிறேன். எதையும் நான் வேண்டுமென்றே அழிக்க மாட்டேன். அழகு என்பது எல்லோரிடமும் இருக்கிறது, நீங்கள் ஒரு நடிகராக இல்லாவிட்டாலும் கூட. ஒவ்வொருவரும் அழகாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு அழகாகவும், பொருத்தமாகவும், ஆரோக்கியமாகவும், மனரீதியாகவும் இருக்க விரும்புகிறார்கள். நான் என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

என் அழகின் உண்மையான காரணம் மனம்தான். மனதில் திருப்தி, சந்தோஷம், நிம்மதியான உறக்கம் இருந்தால் முகத்தில் அழகு தானாகவே வந்துவிடும். நான் ஒருமுறை அழகாக இருப்பதற்காக எனது ஒப்பனை கலைஞரின் ஆலோசனையின் பேரில் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து முகத்தில் பூசக்கூடிய கிரீம் வாங்கினேன். ஆனால் அதை ஒரு முறை மட்டும்தான் பயன்படுத்தினேன். அதற்கு பிறகு அந்த கிரீமை உபயோகிக்கவே இல்லை. எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நடிப்புக்கு வாய்ப்பு உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதுதான் என் வெற்றிக்கு காரணமாக நினைக்கிறேன்” என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT