செய்திகள்

மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கௌதம் கார்த்திக்!

28th Nov 2022 12:39 PM

ADVERTISEMENT

 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் இன்று காலை நடைபெற்றது.

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். மணிரத்தனம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கெளதம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா. கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்தார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. இதனை இருவரும் சமீபத்தில் ஒப்புக் கொண்டனர்.

இதையும் படிக்க | பாபா மறுவெளியீடு: டப்பிங் பணிகளை முடித்தார் ரஜினி!

இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்புடன் மிக எளிமையாக இருவரும் இன்று காலை திருமணம் செய்து கொண்டனர்.

கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா ஜோடிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT