செய்திகள்

'வானதி'யுடன் நாக சைதன்யா காதல்?

27th Nov 2022 10:40 AM

ADVERTISEMENT

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும், இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

இதையும் படிக்க: ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்தது: 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பலரும் முயன்றனர். இருப்பினும், அவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இதனைத்தொடர்ந்து, இந்த பிரபலங்கள் இருவரும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இறங்கினர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. மேலும், இவர்கள் இருவரும் இணைந்து ரகசியமாக வெளியில் சுற்றுவதாகவும் செய்திகள் வலம் வருகின்றன. அண்மையில் இவர்கள் இருவரும் வெளிநாட்டில் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும், இதனை அவர்கள் இருவரும் உறுதி செய்யவில்லை. 

இதையும் படிக்க: பெண்கள் எப்போது அழகு? பாபா ராம்தேவ்வின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

இவர்கள் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதால் இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியாகி உள்ளதாக தெலுங்கு பட உலகில் பேசி வருகின்றனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம்-1-ல் நடிகை சோபிதா துலிபாலா வானதி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT