செய்திகள்

பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலே காலமானார்

26th Nov 2022 04:59 PM

ADVERTISEMENT

பாலிவுட்டின் பழம்பெரும் திரைப்பட நடிகர் விக்ரம் கோகலே இன்று காலமானார். 

விக்ரம் கோகலே அமிதாப் பச்சனுடன் 'அக்னிபத்', சல்மான் கானுடன் 'ஹம் தில் தே சுகே சனம்' உள்பட பல்வேறு மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான 'நிகம்மா' படத்தில் நடித்திருந்தார். 

இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உடல்நலக்குறைவு காரணமாக புணேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானர். அவருக்கு வயது 77. 

இதையும் படிக்க- தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்

ADVERTISEMENT

விக்ரம் கோகலேவின் இறுதிச் சடங்குகள் புணேவில் உள்ள வைகுண்ட சம்ஷன் பூமியில் மாலை 6 மணிக்கு நடைபெற்றதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT