செய்திகள்

ரஜினி மகளுக்கு மெட்டு போடும் ரஹ்மான்! 'லால்சலாம்' அப்டேட்!

25th Nov 2022 07:32 PM

ADVERTISEMENT


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கும் ’லால் சலாம்’ படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமையக்கவுள்ளார்.

படிக்கபூஜாவுக்கு என்ன ஆச்சு? வாக்கர் வைத்து நடக்கிறார்!

அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் படத்திற்கு பாடல்கள் அமைக்கும் பணிகளில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், ஏ.ஆர். ரஹ்மானும் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

ஏ.ஆர். ரஹ்மான் கடும் சுமைகளுக்கு மத்தியில், ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பாடலமைக்கும் வகையில் ரீல்ஸ் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், மிகவும் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குநருடன் திணறுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். மேலும், ஹேஷ்டேக் தமிழ் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

படிக்க அதர்வாவுக்கு கைகொடுக்குமா ‘பட்டத்து அரசன்’? திரைவிமர்சனம்

இந்த விடியோவுக்கு கீழ் ரஹ்மானின் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.  

'லால்சலாம்' படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT