செய்திகள்

நடிகர் போண்டா மணி அரசு மருத்துவமனையில் அனுமதி

26th May 2022 03:31 PM

ADVERTISEMENT

 

நகைச்சுவை நடிகர் போண்டா மணி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி, அகதியாகத் தமிழ்நாட்டுக்கு வந்து சேலத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்தவர். சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, ஏபிசிடி போன்ற 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயற்பெயர் கேதீஸ்வரன். சினிமாவுக்காக போண்டா மணி என மாற்றிக்கொண்டார். 2003-ல் திருமணம் நடைபெற்றது. சாய் குமாரி, சாய் ராம் என இரு குழந்தைகள் உண்டு. சாய் கலைக்கூடம் என்கிற பெயரில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் இதயப் பிரச்னை தொடர்பாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : Bonda Mani
ADVERTISEMENT
ADVERTISEMENT