செய்திகள்

அன்புடன் தேனு: கார்த்திக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஷங்கர் மகள்

25th May 2022 03:59 PM

ADVERTISEMENT

 

விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. 

சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி, கதாநாயகியாக அறிமுகமாகிறார். விருமன் படத்துக்கு இயக்கம் - முத்தையா. இசை - யுவன் சங்கர் ராஜா.

நடிகர் கார்த்தி இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார் அதிதி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு நன்றி. உங்களை எப்போதும் மரியாதையுடன் வியந்து பார்ப்பேன். நீங்கள் எப்போதும் ஊக்கம் அளிப்பவராக இருக்கிறீர்கள். எனக்கு அளித்த அறிவுரைகள், வழிகாட்டுதலுக்கு நன்றி. அன்புடன் தேனு என்று கூறியுள்ளார். விருமன் படத்தில் தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் அதிதி நடித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT