செய்திகள்

மருத்துவமனையில் அனுமதி: மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி. ராஜேந்தர்

24th May 2022 03:18 PM

ADVERTISEMENT

 


பிரபல நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டி. ராஜேந்தர் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது டி.ராஜேந்தர் நல்ல நிலைமையில் இருந்தாலும் மேல் சிகிச்சைக்காகத் தந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என சிம்பு எண்ணுகிறார். இதையடுத்து விசா தொடர்பான பணிகளில் அவருடைய குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சிகிச்சைக்காகவும் பரபரப்பான சென்னை வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகவும் இன்னும் சில நாள்களில் வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளார் டி. ராஜேந்தர். 

தந்தையின் உடல்நிலை குறித்த தகவலை சிம்பு விரைவில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

Tags : T Rajendar
ADVERTISEMENT
ADVERTISEMENT