செய்திகள்

'அந்தகன்' படத்தின் 2வது பாடல்: வெளியீட்டு தேதி அறிவிப்பு

24th May 2022 06:54 PM

ADVERTISEMENT

 

பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் இரண்டாவது பாடல் மே 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல் பாடல் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில், வரும் வியாழக்கிழமை இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. 

பிரஷாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துவரும் படம் அந்தகன். இந்தப் படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

படிக்க வயிற்றில் ரத்த கசிவு: மேல்சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி. ராஜேந்தர்

இந்தப் படத்தில் பிரஷாந்த்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீலா தாம்சன், மனோபாலா, பெசன்ட் ரவி, மோகன் வைத்தியா, லக்ஷ்மி பிரதீப், ரேகா சுரேஷ், செம்மலர், கவிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் தியாகராஜன். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில், உருவாகியுள்ள 'யோசிச்சி யோசிச்சி...' எனும் பாடல் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT