செய்திகள்

தோனியின் படத்தில் நயன்தாரா

12th May 2022 02:29 PM

ADVERTISEMENT

 

சென்னை: முன்னாள் இந்திய அணித் தலைவர் தோனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை நிறுவ உள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. 

தோனியின் கண்கள் இப்பொது சினிமா துறையின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவும் முதன் முதலில் தமிழில் நயன்தாராவை நாயகியாக வைத்து எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்னேஷ் சிவன் தோனியின் ரசிகர். சமீபத்தில் அவரை வைத்து ஒரு விளம்பரப்படம் ஒன்றை இயக்கினார். இவர் மூலமாகக்கூட நயன்தாரா நடிக்க காரணமாக இருக்கலாம்.

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனிக்கு இந்தியா முழுவதுமே ரசிகர்கள் இருந்தாலும் சென்னையில் கூடுதல் ரசிகர்கள். அதனால் அவர் தமிழில் படம் எடுக்க நினைப்பது வணிக ரீதியாக பொருத்தமானது என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT