செய்திகள்

அடேங்கப்பா! தனது மகன் இன்பநிதியைப் பார்த்து மிரளும் உதயநிதி

30th Jun 2022 01:15 PM

ADVERTISEMENT

 

தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நெஞ்சுக்கு நீதி படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தற்போது மாமன்னன் படத்தின் படத்தில் நடித்துவருகிறார். மாரி செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சேலம் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன ?

அரசியல், சினிமா என பரபரப்பாக இயங்கிவருகிறார் உதயநிதி. இவர் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. தற்போது ராக்கெட்ரி, கோப்ரா போன்ற படங்களை ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிடவிருக்கிறார். 

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்பநிதி தனது கையின் பலத்தைக் காட்ட, அதனை உதயநிதி மிரட்சியுடன் பார்க்கிறார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT