செய்திகள்

ஹிந்தி ரீமேக் படத்தில் நாயகனாகும் அர்ஜுன் தாஸ்

29th Jun 2022 01:04 PM

ADVERTISEMENT

 

மலையாள படமான அங்கமாலி டைரிஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அர்ஜுன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

கைதி படத்தில் அன்பு என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தவர் அர்ஜுன் தாஸ். அவரது மிரட்டலான கரகர குரலால் ரசிகர்களை பயமுறுத்தினார் என்றே சொல்ல வேண்டும். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த மாஸ்டர் படும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இடையில் அவர் நாயகனாக நடித்த அந்தகாரம் திரைப்படமும் புத்தம் புது காளை விடியாதா படமும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | விக்ரம் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி?

சமீபத்தில் வெளியான பெரும் வெற்றிப்பெற்ற விக்ரம் படத்திலும் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அங்கமாலி டைரிஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். 

இந்தப் படத்தை கேடி என்கிற கருப்புதுரை படத்தை இயக்கிய மதுமிதா இயக்குகிறார். கோவா பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT