செய்திகள்

இசையமைப்பாளராகும் இயக்குநர் மிஷ்கின் - யார் படத்துக்கு தெரியுமா ?

28th Jun 2022 11:15 AM

ADVERTISEMENT

 

இயக்குநர் மிஷ்கின் முதன் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். 

பாடகராக, பாடலாசிரியராக தனது படங்களில் இசை பணிகளில் ஆர்வம் செலுத்தி வந்த இயக்குநர் மிஷ்கின், முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். 

மிஷ்கினின் சகோதரரும், சவரக்கத்தி படத்தின் இயக்குநருமான ஆதித்யா அடுத்ததாக டெவில் என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஒரு வழியாக விக்ரம் ரசிகர்களின் காத்திருப்புக்கு அறிவிப்பு மூலம் கிடைத்தது பதில் !

இந்தப் படத்தை மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். மாறா, குதிரைவால் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துக்குமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வால்டர், செல்ஃபி படங்களுக்கு படத்தொகுப்பு செய்த எஸ். இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்குநராகவும் பணிசெய்கின்றனர். 

டெவில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின் நான்கு பாடல்களுக்கு இசயமைத்துள்ளாராம். விரைவில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT