செய்திகள்

நாகார்ஜுனாவுடன் மீண்டும் கைகோர்க்கும் கார்த்தி

27th Jun 2022 07:05 PM

ADVERTISEMENT

 

கார்த்தியின் சர்தார் படத்தை தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவின் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் தெலுங்கில் வெளியிடுகிறது.

நடிகர் கார்த்தியின் சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடிகர் நாகார்ஜுனாவின் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் கார்த்தி, நாகர்ஜுனாவுடன் இருக்கும்போது நான் எப்பொழுதும் நல்ல விதமாக உணர்வேன். தற்போது அவர் என் படத்தின் பின்னால் இருப்பதனால் என்னை மிக உறுதியானவனாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பார்த்திபனின் இரவின் நிழல் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, வாணி போஜன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT