செய்திகள்

ரஜினியின் சாதனையை முறியடிப்பாரா கமல் ? வசூல் வேட்டையைத் தொடரும் விக்ரம்

27th Jun 2022 03:42 PM

ADVERTISEMENT

 

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4வது வாரத்திலும் நிறைய திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாம். விரைவில் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தப் படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ''எனக்கு இது தேவை தான்'' - பஞ்சாங்கம் குறித்து பேசியதற்கு மாதவன் வருத்தம்

இந்தப் படம் உலக அளவில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் இரண்டாவது இடத்திலும், தமிழக அளவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத்தின் இசையும் கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவும் படத்தக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. குறிப்பாக இறுதியில் சூர்யா வரும் காட்சியில் திரையரங்குகள் அதிர்ந்ததன. 

இதையும் படிக்க | விக்ரம் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி?

ADVERTISEMENT
ADVERTISEMENT