செய்திகள்

பார்த்திபனின் இரவின் நிழல் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

27th Jun 2022 06:44 PM

ADVERTISEMENT

 

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படமானது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக  உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக வெளியிடுகிறார். ஆர்தர் ஏ.வில்சன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஆள்தோட்ட பூபதி பாடல் ?

இந்தப் படம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT