செய்திகள்

மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படம்: மாமனிதனை பாராட்டிய மிஷ்கின்

27th Jun 2022 08:53 AM

ADVERTISEMENT

மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படம் என்று மாமனிதன் திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. 
மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது- அவன் "மாமனிதன்" ஆகிறான்.

இதையும் படிக்க- ‘அட்லி மாஸ் கமர்சியல் இயக்குநர்’- ஷாருக்கான் புகழாரம்

மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம், இந்தப் படம் என சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது. 
மசாலா படங்களுக்கும் பம்மாத்துப் படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT