செய்திகள்

‘அட்லி மாஸ் கமர்சியல் இயக்குநர்’- ஷாருக்கான் புகழாரம்

26th Jun 2022 04:58 PM

ADVERTISEMENT

 

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் இயக்குநர் அட்லியை மாஸ் கமர்சியல் இயக்குநர் என புகழ்ந்துள்ளார். 

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’ தமிழ் இந்தி தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. 

இதற்கு முன் ஷாருக்கான் தனது அடுத்த படமான ‘பதான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த படத்தினை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: தெலுங்கில் வாழ்த்துக் கூறிய இளையராஜா- காரணம் என்ன?

தனது 30 ஆண்டுகால ஹிந்தி சினிமா பயணம் குறித்துப் பேச ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நேரலையில் உரையாற்றினார். ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் பகிர்ந்த செய்தியாவது: 

இப்படத்தில் நயன்தாரா அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் படத்தைப் பற்றி இப்போது எதுவும் பேச இயலாது. இன்னும் படம் முழுமையாக முடியவில்லை. அட்லியின் படங்கள் வித்தியாசமாக இருக்கிறது. அவரது படங்களை எல்லோரும் பார்த்திருக்கிறோம். அவருடைய படங்கள் மாஸ் கமர்சியல் எண்டர்டெயின்மென்டாக இருக்கும். நான் இதுமாதிரி படங்களில் நடித்ததில்லை. அதனால் இப்படத்தில் நடிக்கிறேன். எனக்கும் அட்லிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. நான் சிலவற்றை தருவேன். அவர் சிலவற்றை தருவார். நாங்கள் ஜவான் படத்திற்காக எது செய்தாலும் சுவாரசியமாக ஈடுபாட்டுடன் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT