செய்திகள்

யோகி பாபுவின் பன்னி குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

25th Jun 2022 03:09 PM

ADVERTISEMENT

 

யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிருமி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அணுச்சரன், அடுத்ததாக யோகி பாபு நடிக்கும் பன்னிக்குட்டி படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் கடந்த 2019 ஆம் ஆண்டே முடிவடைந்ததன. 

இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 3 ஆண்டுகளாகியும் படம் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை தயாரித்துள்ள சூப்பர் டாக்கிஸ் நிறுவனம் இந்தப் படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தெலுங்கில் வாழ்த்துக் கூறிய இளையராஜா- காரணம் என்ன?

இந்தப் படத்தில் யோகி பாபுவும் கருணாகரனும் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் திண்டுக்கல் லியோனி, விஜய் டிவி ராமர், தங்கதுரை, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பன்றி வளர்ப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

முகமூடி, யுத்தம் செய், கிருமி, ஆண்டவன் கட்டளை படங்களுக்கு இசையமைத்த கே இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT