செய்திகள்

''இளவரசி...'': 'குந்தவை' திரிஷாவை கலாய்க்கும் 'வந்தியத்தேவன்' கார்த்தி - பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்

7th Jul 2022 03:03 PM

ADVERTISEMENT

 

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் போஸ்டர் வெளியான நிலையில், கார்த்தி வந்தியத் தேவனாக திரிஷாவுக்கு பதிலளித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் நாளை(ஜூலை 8) பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் போஸ்டர், வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் போஸ்டர், நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | தனக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம் - ''எனக்கு இருக்கும் பிரச்னை..''

இதனை நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருக்கு  கார்த்தி வந்தியத்தேவனாக அளித்த பதிலில்,, இளவரசி, நீங்கள் இருக்கும் லைவ் லொகேசனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை உங்களிடம் அளிக்க வேண்டும்'' என கலாய்த்துள்ளார். 

பொன்னியின் செல்வன் கதைப் படி ஆதித்தகரிகாலனின் ஓலையை குந்தவையிடம் கொடுக்க வந்தியத்தேவன் முயல்வார். அப்போதும் இருவரும் காதல் வயப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  

ADVERTISEMENT
ADVERTISEMENT