செய்திகள்

ரஹ்மான் இசையில் பார்த்திபனின் 'இரவின் நிழல்' பாடலை வெளியிட்ட லோகேஷ்

6th Jul 2022 12:17 PM

ADVERTISEMENT

 

ரஹ்மான் இசையில் பார்த்திபனின் இரவின் நிழல் பாடலை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டார். 

தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவருபவர் பார்த்திபன். தற்போது உலகிலேயே முதன்முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இவரது இரவின் நிழல் உருவாகியிருக்கிறது.

இரவின் நிழல் படத்தில் பார்த்திபனுடன், வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பிரபல நடிகரின் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்'

அந்த வகையில் இந்தப் படத்திலிருந்து பாபம் செய்யாதிரு என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

பார்த்திபன் எழுதியுள்ள இந்தப் பாடலை நிரஞ்சனா ரமணன் கீர்த்தனா வைத்தியநாதன் இணைந்து பாடியுள்ளனர். இரவின் நிழல் திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரைக்குவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT