செய்திகள்

தேர்தல்ல உங்கள வென்றதுக்கு மீண்டும் மகிழ்கிறேன் - கமலை சீண்டிய வானதி சீனிவாசன் - ஏன் அப்படி சொன்னாங்க?

5th Jul 2022 04:44 PM

ADVERTISEMENT

 

விக்ரம் திரைப்படம் பார்த்த அனுபவம் குறித்து வானதி சீனிவாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

விக்ரம் திரைப்படம் வரும் 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இருப்பினும் நிறைய திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

கமல்ஹாசன் தயாரித்து நடித்த இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், நரேன், செம்பன் வினோத், காயத்ரி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.  

ADVERTISEMENT

இந்தப் படம் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அதிகம் வசூலித்த 2வது தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள விக்ரம், தமிழகத்தில் பாகுபலி 2 பட வசூல் சாதனையை முறியடித்தது. 

இந்த நிலையில் விக்ரம் படத்தை திரையரங்கில் பார்த்த அனுபவம் குறித்து பாஜகவைச் சேர்ந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், தேர்தல் களத்தில் உங்களை வென்றதற்கு மீண்டும் ஒருமுறை மகிழ்கிறேன். விக்ரம் படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT