செய்திகள்

‘காளி’ போஸ்டர்: இந்து மத உணர்வாளர்கள் இயக்குநர் லீனா மணிமேகலை மீது புகார்

DIN

கையில் சிகரெட்டுடன் இருக்கும் ‘காளி’ போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது இந்து மத உணர்வாளர்கள் புகாரளித்துள்ளனர்.  

காளி வேடமணிந்த ஒரு பெண்ணின் கையில் சிகரெட்டும், இன்னுமொரு கையில் பால்புதுமையினர் இனத்தின் கொடியும் இருந்தது. இன்னப்பிற கைகளில் தண்டாயிதம் சூலம் இருந்தது. 

இந்த புகைப்படம் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தியதால் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. 

லீனா மணிமேகலை தமிழ்க் கவிஞர், ஆவண நிகழ்படக் கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர். பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டம் உட்பட்டன இவரது கவிதைகளின் கருப்பொருள்களாக அமைகின்றன. அதிகமாக ஆவணப்படங்களையும் சில திரைப்படங்களையும் எடுத்துள்ளார். சமீபத்தில் ‘மாடத்தி’ எனும் படத்தினையும் எடுத்து வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில் இந்த ஆவணப்பத்தின் இயக்குநர் மற்றும் நடிகை லீனா மணிமேகலை கூறியதாவது: 

ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தால் என்னை கைது செய்யும் எண்ணத்தை விட்டு லவ் யூ சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT