செய்திகள்

துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' பட குறுமுகில் பாடல் இதோ

4th Jul 2022 04:24 PM

ADVERTISEMENT

 

துல்கர் சல்மானின் சீதா ராமம் படத்திலிருந்து விஷால் சந்திரசேகர் இசையில் குறுமுகில் என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

மகாநடி படத்துக்கு பிறகு வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர், ராஷ்மிகா நடித்துள்ளனர். ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விவாகரத்துக்கு இதுதான் காரணம் - பிரபல இயக்குநரிடம் முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து குறுமுகில் என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

மதன் கார்கி எழுதியுள்ள இந்தப் பாடலை சாய் விக்னேஷ் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT