செய்திகள்

அருண் விஜய் நடிக்கும் புதிய இணையத்தொடர் ‘தமிழ் ராக்கர்ஸ்’

3rd Jul 2022 11:31 AM

ADVERTISEMENT

 

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் இணையத்தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், வானி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்த தொடரின் பெயர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர். 

இந்தத் தொடருக்கு தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய உள்ளார். இசை- விகாஷ் படிஷா. 

ADVERTISEMENT

இத்தொடரை ஏவிஎம் புரடக்‌ஷன் தயாரிக்கிறது. டீசர் இன்று மாலை வெளியாகுமென சொல்லப்படுகிறது. 

இந்தத் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்ற தகவலை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT