செய்திகள்

''மூச்சு இருக்கும் வரை...'' - தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு நாசர் விளக்கம்

2nd Jul 2022 02:22 PM

ADVERTISEMENT

 

தன் உடல் நிலை குறித்த வதந்திக்கு நடிகர் நாசர் பதிலளித்துள்ளார். 

வில்லன், குணச்சித்திர வேடம், நகைச்சுவை வேடம் என அனைத்து வகை கதாப்பாத்திரங்களிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் திறம்பட கையாண்டு தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் நாசர். தற்போது நடிகர் சங்கத் தலைவராக செயலாற்றிவருகிறார்.

இந்த நிலையில் நடிகர் நாசர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இனி நாசர் நடிக்கமாட்டார் எனவும் தகவல் பரவியது. இதனையடுத்து இந்த தகவல் அனைத்தும் தவறானவை என அவரது மனைவி கமீலா தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விக்ரம் வெற்றி - 'இந்தியன் 2' படத்தைக் கையிலெடுக்கும் உதயநிதி

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, நாசரின் உடல்நிலை குறித்தும், அவர் நடிக்கமாட்டார் என்றும் செய்திகள் பரவுகின்றன. யார் இதை பரப்பியிருந்தாலும் நன்றாக இருங்கள். நாசர் சாப்பிடுவதும் மூச்சுவிடுவதும் சினிமாவைத் தான். தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தன்னைப் பற்றிய வதந்தி குறித்து பதிலளித்த நாசர், என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக்கொண்டே இருப்பேன் என விளக்கமளித்துள்ளார். 

Tags : Nassar
ADVERTISEMENT
ADVERTISEMENT