செய்திகள்

தனுஷின் ‘மாறன்’ விடியோ பாடல் வெளியீடு

26th Jan 2022 07:57 PM

ADVERTISEMENT

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'மாறன்' திரைப்படத்தின் பொல்லாத உலகம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘மாறன்’. நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 

இதையும் படிக்க | பிப்.19இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ADVERTISEMENT

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் மாறன் திரைப்படத்தின் பொல்லாத உலகம் விடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT