செய்திகள்

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டிரெய்லர் வெளியானது

19th Jan 2022 05:17 PM

ADVERTISEMENT

 

விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்து நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். து.பா.சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

வீரமே வாகை சூடும் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக பெரிய நடிகர்கள் ஒத்திவைக்கப்படுவதால், விஷாலின் திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் உருவானது. ஆனால் ஜனவரி 26 ஆம் தேதி படம் வெளியாவது உறுதி என விஷால் அறிவித்துள்ளார். 

இதையும் படிக்க | நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: ஹரி நாடார் கைது

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க அனல் பறக்கும் சண்டைகாட்சிகளுடன் இந்தப் படத்தின் டிரெய்லர் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க, யோகி பாபு, குமாரவேல், ரவீனா ரவி, மாரிமுத்து, ஆர்என்ஆர் மனோகர், கவிதா பாரதி, துளசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT