செய்திகள்

பிரம்மாண்டமாக உருவாகும் ‘சிம்பு 50’

30th Dec 2022 01:09 PM

ADVERTISEMENT

 

நடிகர் சிம்புவின் 50-வது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக் 'பத்து தல' என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது சிம்பு 48-வது படமாகும்.

இதையும் படிக்க: 'தெரிந்தே சாதிய கொடுமைகள் நடக்கிறது’: பா.ரஞ்சித்

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, 49-வது படத்தை நடித்துக்கொடுத்தபின் சிம்புவின் 50வது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது சுதா கொங்காரா இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT