செய்திகள்

தனுஷுடன் இணையும் சஞ்சய் தத்?

9th Dec 2022 11:09 AM

ADVERTISEMENT

 

நடிகர் தனுஷ் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற 2023, பிப்.17 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் மீண்டும் தெலுங்கு படமொன்றில் நடிக்க உள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: நயன்தாராவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி

சேகர் கமுலா இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்க இந்திய அளவில் முக்கிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் படக்குழுவினர் பேசியதாகவும் அவர் சம்பளமாக ரூ.10 கோடி கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT