செய்திகள்

2022-ல் யூடியூப்பை ஆக்கிரமித்த விஜய் பட பாடல்!

8th Dec 2022 03:37 PM

ADVERTISEMENT

 

இந்தாண்டு யூடியூப்பில் பிரபலமான பாடல்களில் இந்திய அளவில் விஜய் பட பாடல் இடம்பிடித்து அசத்தியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, அரபிக் குத்து வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது.

ADVERTISEMENT

பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின. 

இதையும் படிக்க | பாபா அதிகாலைக் காட்சிகள் 'ஹவுஸ்புல்’

இந்நிலையில், 2022-ல் யூடியூப்பில் அதிக பிரபலமான பாடல்களில் ‘அரபிக்குத்து’ இந்திய அளவில் 2-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இப்பாடல் இதுவரை விடியோவாக 34 கோடி பார்வைகளையும் லிரிக்கல் விடியோவாக 49 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது.

பிரபலமான பாடல்கள் பட்டியலில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ முதலிடத்திலும் ‘சாமி..சாமி’ பாடல் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT