செய்திகள்

வேகமாக நடைபெறும் ‘விஜய் 67’ முன்னோட்ட விடியோ படப்பிடிப்பு

7th Dec 2022 12:28 PM

ADVERTISEMENT

 

விஜய் 67 திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியானது. 

இதையும் படிக்க- வணங்கான் - சூர்யாவுக்கு பதில் பிரபல நடிகர் ஒப்பந்தம்!

ADVERTISEMENT

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் டிச.5 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில்,  விஜய் 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Lokesh kanagaraj At AVM Studio
To Going Thalapathy67 Poojai#ThalapathyVijay #Thalapathy67pooja #thalapathy67 pic.twitter.com/KclQd8eLaI

— Vijay (@actorjoseph1974) December 5, 2022

விஜய் 67 படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பின்னணியில் தயாராக உள்ளதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT