செய்திகள்

சர்தார் வெற்றி: இப்படி ஒரு பரிசா? படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கார்த்தி

7th Dec 2022 04:38 PM

ADVERTISEMENT

 

‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு நடிகர் கார்த்தி பரிசளித்துள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இதனால், படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க | 'டிஎஸ்பி' தோல்வி: கமெண்ட்ஸ் ஆஃப் செய்துவிட்டு பதிவிடும் விஜய் சேதுபதி

இந்நிலையில், நடிகர் கார்த்தி ‘சர்தார்’ படத்தில் பணிபுரிந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரூ.30,000 மதிப்புள்ள வெள்ளி தண்ணீர் பாட்டில்களை பரிசாக கொடுத்துள்ளார். இப்படம் தண்ணீரை மையமாக வைத்து உருவானதாலும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு எதிராகவும் இப்பரிசை வழங்கியுள்ளார்.

பரிசளிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்

முன்னதாக, இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் லான்சன் காரைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : Karthi Sardar
ADVERTISEMENT
ADVERTISEMENT