செய்திகள்

'வெண்ணிலா கபடி குழு' திரைப்பட நடிகர் காலமானார்

3rd Dec 2022 09:49 AM

ADVERTISEMENT

'வெண்ணிலா கபடி குழு' திரைப்பட நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவர் 'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்' ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் பிரபல பரோட்டா காமெடியில் இவர் நடித்தது அதிகம் பேசப்பட்டது.

ADVERTISEMENT

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 

இதையும் படிக்க | டிச. 7ல் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ADVERTISEMENT
ADVERTISEMENT