செய்திகள்

'வாரிசு' திரைப்படத்தின் அப்டேட்

2nd Dec 2022 05:41 PM

ADVERTISEMENT

வாரிசு படத்தின் அப்டேட் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படம் வாரிசு. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  

படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க தில்ராஜு தயாரித்துள்ளார். மேலும் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். அண்மையில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

இதையும் படிக்க- தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நடிகை! குவியும் விமர்சனங்கள்

ADVERTISEMENT

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் வாரிசு படத்தின் அப்டேட் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT